கெட்டவன் படத்தில் சிம்பு காட்டிய அலம்பலைத் தாங்கமுடியாமல் ஓடிப்போனார் இயக்குனர் நந்து.
இதற்கிடையில் படத்தின் பட்ஜெட் ஆறரைக்கோடி என்று பேசப்பட்டிருந்தது. படத்தின் சிறுபகுதிதான் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. இப்போதே படத்தின் பட்ஜெட் மூன்று கோடியை தாண்டிவிட்டதாம். இப்படியே போனால் பட்ஜெட் எகிறிவிடும் என்பதால், தயாரிப்பாளர் அதை சிம்புவிடம் பேசி முடிவு பண்ணலாம் என்று படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்.
காளை படப்பிடிப்பு இந்த மாதத்திற்குள் நடித்து முடித்துக் கொடுத்துவிடுவாராம் சிம்பு. டிசம்பரில் ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்கும் சிலம்பாட்டம் படத்திற்கு போய்விடுவார்.
அதனைத் தொடர்ந்து ஏப்ரலில் லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்குள் பட்ஜெட் பிரச்னையை முடித்தால்தான் கெட்டவன் படத்தின் நடிக்க முடியும். இல்லையென்றால் கெட்டவன் படப்பிடிப்பு தள்ளிப்போய்விடும்.