தமிழ் எம்.ஏ., ராமேஸ்வரம், தெனாவெட்டு ஆகிய மூன்று படங்களில் ஜீவா கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதில் தமிழ் எம்.ஏ. ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. ஒரு பாடல் காட்சியைத் தவிர ராமேஸ்வரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தெனாவெட்டு படத்தின் முக்கால்வாசி படம் முடிந்துவிட்டது. இந்நிலையில் வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார் ஜீவா. காரணம் இம்மூன்று படத்திலும் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத வேறு வேறு கதாபாத்திரங்களில்
நடித்திருக்கிறாராம்.
இதில் ரசிகர்கள் தன்னிடம் எதை அதிகமாக விரும்புகிறார்கள் என்பதை படத்தின் ரிசல்டை பார்த்து தெரிந்து கொண்டு அடுத்த படத்தில் ஒப்பந்தமாக திட்டமிட்டிருக்கிறாராம் ஜீவா. புத்திசாலித்தனமான முடிவுதான்.