ஜாக்குவார் தங்கம் தன் மகனை கதாநாயகனாக வைத்து சூர்யா என்ற படத்தை இயக்கி தயாரிக்கிறார். சுபாஷ் என்பவர் இப்படத்தின் எடிட்டராக இருக்கிறார்.
அவருக்கும் இயக்குனருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏதோ பிரச்சினையாம். இதை மனதில் வைத்துக் கொண்டு ஜாக்குவார் தங்கம் எடிட்டரை அவமதிப்பதைப் போல் நடந்து கொண்டாராம்.
எடிட்டிங் அறையில் உட்கார்ந்து அவர் செய்யும் அலம்பை பொறுக்க முடியாத எடிட்டர் என்னால் இனிமேல் இந்த படத்தில் வேலை செய்ய முடியாது என்று எடிட் செய்தவற்றை லேபில் கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டாராம்.
கையோடு எடிட்டர் அசோஸியேசனில் ஜாக்குவார் தங்கம் மீது புகாரும் கொடுத்து விட்டாராம்.