மாயக்கண்ணாடியின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் சேரன் நவ்யா நடித்த பாடல் காட்சிகளை ஒளிபரப்பினார்கள்.
சேரன் எந்தக் கவலையும் படாமல் நம்பிக்கையுடன் நடனமாடியிருக்கிறார். பெரிய ஹீரோக்களுக்கு நிகராக அவரது நடனம் சிறப்பாக அமைந்திருந்தது. அதுவும் வெளிநாட்டு லோக்கேஷன்களில் அவர் நவ்யாவுடன் ஆடிய நடனமும் காட்சியமைப்பும் நன்றாக இருந்தது.
அவரும் எல்லோரையும் போலவே இறங்கி விட்டாரா என்று கேட்க முடியாத அளவிற்கு இந்தப் பாடல் காட்சிகளுக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கிறது. சினிமாவில் நடிக்க ஆசைபடும் சேரன் தான் ஹீரோவாகிவிட்டால் எப்படி பாடலுக்கு நடனமாடுவோம் என்று நினைத்து பார்ப்பார் அதுதான் அந்த நடன பாடல் காட்சி.
அதேபோல் நவ்யா மௌண்ட்ரோட்டில் வைக்கப்பட்டிருக்கும் சினிமா படத்தின் பேனரை பார்த்து அவரும் சேரனும் சேர்ந்து "உலகிலே அழகி நான் உனக்குத்தான் உனக்குத்தான்" எனத் தொடங்கும் பாடலில் வெளிநாட்டில் ஆடிப் பாடுவதாக கனவு காண்பார். எப்படியோ சேரனுக்கு நடனமாடவும் தெரியும் என்பதை நிருபித்திருக்கிறார்.