Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரூப் 2 தேர்வு அறிவிப்பு: 1863 காலியிடங்கள்

Advertiesment
குரூப் 2 தேர்வு அறிவிப்பு: 1863 காலியிடங்கள்
, திங்கள், 12 அக்டோபர் 2015 (14:36 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நிரப்படவுள்ள 1863 குரூப் 2A பணியிடங்களுக்கு எழுத்து தேர்வினை அறிவித்துள்ளது. இந்த தேர்வு நேர்காணல் இல்லாமல் நடைபெறும். இதற்கான விளம்பர அறிவிப்பை இன்று டிஎன்பிஎஸ்சிவெளியட்டுள்ளது.
 
நிதி, சட்டம், வருவாய், உள்பட ஆகிய துறைகளில் 1863 காலிப்பணியிடங்கள்  நீண்ட காலமாக நிரபமல் இருந்தது. இந்த பணியிடங்களை உடனடியாக நிரப்பு டிஎன்பிஎஸ்சி  ஆணையம் குரூப் 2 தேர்வை அறிவித்துள்ளது. வழக்கமான குரூப் 2 தேர்வைப் போல மூன்று கட்டமாக இல்லாமல், எழுத்துத் தேர்வின் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எழுத்துத் தேர்வு இரண்டு பிரிவுகளாக இருக்கும். முதல் பிரிவில் பட்டப்படிப்பு கல்வித் தகுதி அடிப்படையிலான பொதுப் பாடங்கள் குறித்த வினாக்கள் கேட்கப்படும். 
இரண்டாவது பிரிவான மொழிப்படங்களில் ஆதவது பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்திற்கான 100 வினாக்களை உள்ளடக்கியது. இரண்டு பிரிவு தேர்வுகளும் ஒரே நாளில் நடைபெறும் என அறிவித்துள்ளது.
 
குரூப் 2A தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு அறிய www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in ஆகிய இணைய தளங்களை பார்க்கலாம்.
 
இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய நவம்பர் 11ஆம் தேதி கடைசி நாள். 

குரூப் 2A எழுத்துத் தேர்வு டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தேர்வு நுழைவுச்சீட்டை தேர்வுக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil