Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொழில் திறன்பெற்று, வேலை தேடுபவர்களுக்குப் புதிய இணையத் தளம்

Advertiesment
தொழில் திறன்பெற்று, வேலை தேடுபவர்களுக்குப் புதிய இணையத் தளம்
, வெள்ளி, 11 ஜூலை 2014 (20:05 IST)
தொழில் திறன்பெற்ற வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கான புதிய இணையத் தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் தொழில் திறன்பெற்ற, வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு http://www.niesbudnaukri.com என்ற வேலை வாய்ப்புக்கான இணையத் தளத்தைத் தொடங்கியுள்ளது.
 
வழக்கமான வேலை வாய்ப்பு முறையின் கீழ் வராத, பயிற்சி பெற்று வேலை தேடுபவர்களுக்குப் பயன் அளிப்பதற்கான முதல் முயற்சிதான் இந்த இணையத் தளம். இந்த இணையத் தளம், முதலாளிகளுக்கும் மற்றும் தொழிலாளர்களுக்கும் பொதுவானது.
 
வேலை தேடுபவர்கள் எந்தவிதக் கட்டணமும் இன்றி, இந்த இணையப் பக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இணையத் தளத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே சமயத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், தேவையான போது தேசிய சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் ஆலோசனையும் பெற்றுக்கொள்ளலாம். தேவை உள்ளவர்களுக்கு, திறனை வளர்ப்பதற்கும் இந்த இணையத் தளம் உதவியாக இருக்கும்.

 
அதேபோல், தொழில் முனைவோர்கள் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள பயிற்சி பெற்றவர்களை இந்த இணையத் தளம் மூலம் கண்டறிய முடியும். கிராமப் பகுதிகளில் உள்ள திறமையான இளைஞர்களையும் எளிதில் கண்டறிய இது உதவும்.
 
இந்த இணையத் தளத்தில் நடைபெறும் நடிவடிக்கைகளைக் கொண்டு தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், சந்தைப் போக்கை மதிப்பீடு செய்யும். அதன் மூலம் சந்தைப் போக்கிற்கு ஏற்ப படிப்புகளையும் பாடங்களையும் திட்டமிடும்.
 
இந்தத் தேசிய தொழில் முனைவு மற்றும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி நிறுவனம் ஆகும். இதில் இதுவரை 2,70,000 மாணவர்கள் பயின்றுள்ளனர். அதில் 25 வெளிநாடுகளை 2,600 மாணவர்களும் அடங்குவர். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த நிறுவனம் ஆண்டிற்கு 1 லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil