பொதுவாக வயிற்றில் உள்ள குடல் இருக்கும் இடத்தில் இல்லாமல் இடம் மாறி இருப்பதை குடல் இறக்கம் அல்லது குடல் ஏற்றம் என கூறுகிறோம்.
இதில் குடல் இறக்க நோய்க்கு ஆசனப் பயிற்சிகள் மூலமாக நிவாரணம் பெற இயலும்.
குடல் ஏற்றம் என்பது தானாகவே சரியாகக் கூடியது. ஏனெனில் நாம் நிற்கும் நிலையில் இருப்பதால் குடல் ஏற்றம் பொதுவாக தானாகவே சரியாகிவிடும்.
ஆனால் சில சமயங்களில் இது தீவிரமாகும். ஒரு குடல் மேலிருக்கும் மற்றொரு குடல் மீது ஏறிக் கொண்டிருக்கும். குழந்தைகளுக்குத்தான் இந்த நோய் அதிகம் ஏற்படும்.
கீழே விழுவது போன்ற சில செய்கைகளால் குடல் ஏற்றம் ஏற்படும். குடல் ஏற்றம் ஏற்பட்டுவிட்டால், உடலில் இருக்கும் சத்துகள் விரைவாக விரையமாகத் துவங்கிவிடும்.
குடல் ஏற்றம் ஏற்பட்ட இடத்தில் இருக்கும் குடல் பகுதி, உணவை முழுதாக ஜீரணிக்காமல், அதில் உள்ள சத்துக்களை பிரிக்காமல், ஏற்றம் ஏற்பட்ட குடல் பகுதிக்குள் உணவைத் வேகமாகத் தள்ளுவதிலேயே முழுக் கவனம் செலுத்தும். இதனால் சாப்பிடும் சாப்பாடு செரிக்காமல் குழந்தைக்கு பேதியாகும்.ஒருவேளை குடல் பகுதி வழியாக உணவு வெளியேறாத நிலையில் வாந்தி ஏற்படும். இந்த பிரச்சினை குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். பெரியவர்களுக்கு ஏற்படுவது மிகவும் அரிது. குழந்தைகளுக்கும் தலைகீழாக விழும் போது அல்லது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து அலறி அடித்துக் கொண்டு எழும்பும் போது இதுபோன்று நேரிட வாய்ப்புள்ளது.இதற்கு பொதுவாக குழந்தைகளை தலைகீழாகப் போட்டு தட்டுவது, துணியில் போட்டு ஏற்றம் இறக்கமாக ஆட்டுவது போன்றவற்றை செய்வார்கள்.இதனையும் எளிதாக சரி செய்யலாம்.