இலங்கை செல்வதற்கு பதில் மீண்டும் சென்னைக்கே வந்த விமானம்! – பயணிகள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (16:16 IST)
சென்னையிலிருந்து புறப்பட்டு இலங்கை சென்ற விமானம் மீண்டும் சென்னையிலேயே வந்து இறங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அல்லயன்ஸ் ஏர் பயணிகள் விமானம் ஒன்று 28 பயணிகளை ஏற்றிக் கொண்டு இலங்கை யாழ்பாணம் விமான நிலையத்திற்கு புறப்பட்டது. இலங்கை சென்ற அந்த விமானம் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் இருந்தது. இதனால் மீண்டும் அந்த விமானம் சென்னை விமான நிலையத்திற்கே திருப்பி விடப்பட்டது.

சென்னையிலிருந்து புறப்பட்டு மீண்டும் சென்னையிலேயே இறக்கி விடப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அவர்கள் சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மீண்டும் அதே விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒருநாள் தாமதம் செய்யப்படுவது பயணிகளை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளதாக தெரிகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments