சென்னையில் கள்ளத்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள், கேரளாவில் இருந்து படிக்க வந்த 19 வயது நர்ஸை இரண்டு நாட்கள் அடைத்து வைத்து காமவெறி கொண்ட டாக்டர்கள் கதற, கதற கற்பழித்த கொடுமை சென்னையில் அரங்கேறியுள்ளது.
கேரளா மாநிலம் ஆலப்புழை அருகே உள்ள தொடுபுழா என்ற ஊரை சேர்ந்த 19 வயதுடைய ஷகிலா (பெயர் மாற்றம்) என்ற இளம் பெண், நர்ஸ் படிப்புக்காக 3 மாத பயிற்சிக்காக, திருச்சியில் உள்ள கேரள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு வந்துள்ளார். இந்த மையத்தின் கிளை சென்னை திருமங்கலத்திலும் செயல்படுகிறது.
கடந்த ஜூன் 12ஆம் தேதி திருச்சி வந்த நர்ஸ் ஷகிலா, பின்னர் சென்னை மையத்துக்கு கடந்த 7ஆம் தேதி பயிற்சிக்காக இரயிலில் வந்துள்ளார். எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஷகிலாவை ஆட்டோவில் அழைத்து சென்ற டாக்டர் அஜில்குமார், தான் தங்கியிருந்த விருந்தினர் இல்லம் சென்றுள்ளார். அங்கு சென்றதும் ஷகிலாவை குளிக்க வைத்துள்ளார். குளியலறையில் கேமிராவை பொருத்தி படம் பிடித்துள்ளார் அஜில்குமார்.
குளித்துவிட்டு வந்த ஷகிலாவை செக்சுக்கு அழைத்துள்ளார் காமவெறியன் அஜில்குமார். மறுப்பு தெரிவிக்கவே குளியலறை காட்சியை படம் பிடித்ததை காட்டி மிரட்டியுள்ளார். அப்படி இருந்தும் மறுப்பு தெரிவித்து தப்பிக்க முயன்ற ஷகிலாவை கத்தியை காட்டி கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார் அஜில்குமார்.
ஷகிலாவிடம் காமவெறியாட்டத்தை விளையாடிய அஜில்குமார், பின்னர் அவனது நண்பன் டாக்டர் ஸ்ரீஜத் அனுப்பி ஷகிலாவை கற்பழித்தார். 19 வயதான ஷகிலாவுக்கு காமவெறியர்களின் அட்டகாசத்தால் வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறியுள்ளார். இப்படி இரண்டு நாட்கள் ஷகிலாவை விருந்தினர் இல்லத்தில் வைத்து, அந்த காமகொடூரர்கள் கற்பழித்துள்ளனர்.
நடக்கக்கூட முடியாத அளவுக்கு இரண்டு காமகொடூரர்களும் கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர். தனது பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிந்தால், அவர் தற்கொலை செய்து கொள்வார் என்று வேதனையுடன் போலீசாரிடம் கூறியுள்ளார் ஷகிலா.
இந்த வழக்கை சென்னை ஜெ.ஜெ.நகர் போலீஸ் நடத்தி வருகிறது. காமக்கொடூர டாக்டர்களான அஜில்குமார், ஸ்ரீஜத் ஆகியோர் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் தற்போது தங்களது திருமங்கலம் கிளினிக்கை மூடிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர்பாபு தலைமையிலான தனி படை இந்த காமக்கொடூரர்களை தேடி வருகிறது. அஜில்குமார், ஸ்ரீஜத் ஆகியோரால் பாதிக்கப்பட்ட பெண்கள் வேறு யாராவது இருந்தால் ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் கொடுக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த வெறியாட்டம் நடத்திய டாக்டர்கள் இருவருக்கும் 41 வயது. கேரளாவைச் சேர்ந்த இருவருக்கும் திருமணமாகி, மனைவி, குழந்தைகள் உள்ளனர்.