Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அழியாப் புகழ் இந்திரா காந்தி!

Advertiesment
அழியாப் புகழ் இந்திரா காந்தி
, சனி, 20 நவம்பர் 2010 (18:15 IST)
உலக நாட்டு தலைவர்களால் இந்தியாவின் இரும்பு பெண்மணியாக வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 93 ஆவது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி, தேசம் அவருக்கு மலரஞ்சலி செலுத்தி, அத்தலைவரை நினைவு கூர்ந்த தினத்தில், அவரது புகழுக்கு மேலும் ஒரு மகுடமாக கடந்த நூற்றாண்டின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்திராவுக்கும் இடமளித்து அவரை கவுரப்படுத்தியுள்ளது அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான "டைம்"

1966 ஆம் ஆண்டு இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றபோது, " பிரச்னைக்குரிய இந்தியா இப்போது ஒரு பெண்ணின் உறுதியான கையில்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு அப்போதும், அவருக்கு புகழ் சேர்த்திருந்தது டைம்!

இந்நிலையில் அவர் மறைந்து ஏறக்குறைய 26 ஆண்டுகள் ஆன பின்னரும், உலக அரங்கில் மிளிரிட்ட அவரது ஆளுமை மற்றும் துணிச்சல் குணம் இன்னும் மறக்கப்படவில்லை என்று கருதும் விதமாகவே, இந்திராவுக்கு கடந்த நூற்றாண்டின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 ஆவது இடத்தை அளித்து, " இந்திரா இந்தியாவின் மகள்; சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் கண்காணிப்பில் வளர்ந்தவர்" என்று டைம் பத்திரிக்கை புகழாரம் சூட்டியுள்ளது.

"டைம்" பத்திரிக்கை வெளியிட்டுள்ள கடந்த நூற்றாண்டின் சக்தி வாய்ந்த 25 பெண்கள் பட்டியலிலேயே இந்திரா காந்திக்கு இந்த 9 ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமை சேர்க்கும் விதமாக அன்னை தெரசாவும் இடம் பெற்றுள்ளார். அவர் 22 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.இவர்கள் இரண்டு பேர் மட்டுமே இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர் ஆவர்.

அதே சமயம் இப்பட்டியலின் முதலிடத்தில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண்ணான ஜேன் ஆடம்ஸ் உள்ளார்.

தற்போதைய அமெரிக்க அயலுறவுத்துறை அமைச்சரான ஹில்லாரி கிளின்டன், 6 ஆவது இடத்தில் உள்ளார்.

இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்களும், இடமும் வருமாறு:

1) ஜேன் ஆடம்ஸ் ( 1860 - 1935)

2) கோராஷான் அகினோ ( 1933 - 2009 )

3) ரேச்சல் கார்சன் ( 1907 - 1964)

4) கோகோ சேனல் ( 1883 - 1971 )

5) ஜூலியா சில்ட் ( 1912 - 2004 )

6 ) ஹில்லாரி கிளின்டன் ( 1947 - இருக்கிறார்)

7) மேரி கியூரி ( 1867 - 1934 )

8) ஆர்தா ஃபிரான்ங்ளின் (1942 - இருக்கிறார்)

9) இந்திரா காந்தி (1917-1984)

10) எஸ்டீர் லாடர் (1908-2004)

11) மடோனா (1958 - இருக்கிறார்)

12) மார்கரெட் மேட் (1901-1978)

13) கோல்டா மேர் (1898-1978)

14) ஏஞ்சலா மெர்கெல் ( 1954 - இருக்கிறார்)

15) சாண்ட்ரா டே ஓ கானார் (1930-இருக்கிறார்)

16) ரோசா பார்க்ஸ் (1913-2005)

17) ஜியாங் கிங் (1914-1991)

18) எலேனார் ரூஸெவெல்ட் (1884-1962)

19) மார்கரெட் சாங்கர் (1879-1966)

20) க்ளோரியா ஸ்டீனெம் (1934-இருக்கிறார்)

21) மார்தா ஸ்டெவர்ட் (1941-இருக்கிறார்)

22) மதர் தெரசா (1910-1997)

23) மார்கரெட் தாட்சர் (1925-இருக்கிறார்)

24) ஓப்ரா வின்ஃப்ரே (1954-இருக்கிறார்)

25) விர்ஜினா வோல்ஃப் 1882-1941)

Share this Story:

Follow Webdunia tamil