Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து மைதானங்களால் ஒரு உதவியும் இல்லை: பும்ரா காட்டம்

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (13:30 IST)
“இங்கிலாந்து மைதானங்கள் பவுலிங் போடுவதற்கு ஏற்றது அல்ல” என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பும்ரா பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்ப்ரித் பும்ரா. லண்டனில் நடந்து வரும் உலக கோப்பை போட்டிகளில் விளையாடிவரும் பும்ரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “இங்கிலாந்து பவுலர்களுக்கு சொர்க்கபுரி, பந்து வீசும்போது வேகமாக ஸ்விங் ஆகும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அதெல்லாம் வெறும் மாயையோ என்று சந்தேகமாக இருக்கிறது. இங்கே இருக்கும் மைதானங்கள் எல்லாம் பேட்டிங் செய்வதற்கு சாதகமானவையாக இருக்கின்றன. இதனால் பவுலர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. பவுலர்கள் தங்கள் சொந்த அனுபவத்திலும், வேகத்திலுமே பந்து வீச வேண்டியிருக்கிறது.” என்று பேசியுள்ளார்.

மேலும் அவர் “முதல் போட்டியில் சவுத்தாம்ப்டனில் விளையாடிய மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் பந்து பழசானால் அதில் விளையாடுவதும் சிரமமே. நாம் சொந்த உத்தியில் வீசினாலும் பிட்ச் சப்போர்ட் செய்யாத நிலையில் அது பேட்ஸ்மேனுக்கு சாதகமாக போகும் நிலையிலேயே லண்டனில் மைதானங்கள் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா.! டி-20 தொடரை வென்ற மேற்கிந்திய அணி..!

இறுதி போட்டியில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்: பேட் கம்மின்ஸ்

இன்று ஐபிஎல் இறுதி போட்டி.. கொல்கத்தா - ஐதராபாத் பலப்பரிட்சை.. யாருக்கு கோப்பை?

தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் மிடாஸ் மன்னனா பேட் கம்மின்ஸ்?.. அடுத்தடுத்து வென்ற கோப்பைகள்!

இப்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை…. ஆட்டநாயகன் விருது பெற்ற ஷபாஸ் அகமது!

அடுத்த கட்டுரையில்
Show comments