Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக கோப்பையில் ஆட மாட்டேன் – ஷிகார் தவான் வீடியோவால் வருத்தமடைந்த ரசிகர்கள்

Advertiesment
உலக கோப்பையில் ஆட மாட்டேன் – ஷிகார் தவான் வீடியோவால் வருத்தமடைந்த ரசிகர்கள்
, வியாழன், 20 ஜூன் 2019 (16:25 IST)
நடைபெற்றுவரும் உலக கோப்பை ஆட்டங்களில் தான் இனி விளையாட போவதில்லை என ட்விட்டரில் வீடியோ வெளியிட்டிருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரார் ஷிகார் தவான்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஷிகார் தவான். சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பவுலரான இவர் கடந்த ஜூன் 9ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் 109 பந்துகளுக்கு 117 ரன்கள் அடித்து இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாய் இருந்தார். அன்று அவர் விளையாடிய ஆட்டத்தில் தசைகளில் பிடிப்பு ஏற்பட்டது. உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட தவான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இனிமேல் ஷிகார் தவான் விளையாட மாட்டாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அப்போது பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி “ஷிகார் தவான் குணமாகும் வரை தொடர்ந்து சில ஆட்டங்களில் அவர் பங்குபெற மாட்டார்” என கூறியிருந்தார்.

ஆனால் அவருக்கு காயம் மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தவான் பழையபடி குணமடைய நீண்ட காலம் ஆகும் என்பதால் அவர் இந்த உலக கோப்பை ஆட்டம் முழுவதற்கும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்ட ஷிகார் தவான் “நான் உலக கோப்பை போட்டிகளில் இல்லை என்பதை தெரிவிக்க எனக்கு வருத்தமாகதான் இருக்கிறது. கட்டை விரல் இன்னும் குணமாகததால் இதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் நான் என் முழு அன்புடன் எனது குழுவுக்கும், ரசிகர்களுக்கு, மொத்த தேசத்துக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய்ஹிந்த்!” என்று பதிவிட்டுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை:குழப்பம் காரணமாக மாற்றம்