Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”லைட்டா பயமாதான் இருக்கு”:இன்று வங்கதேசத்துடன் மோதும் ஆஃப்கானிஸ்தான்.

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (12:16 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 31 ஆவது லீக் போட்டியில், வங்கதேசம்-ஆஃப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

இங்கிலாந்து நாட்டில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மிகவும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று 31 ஆவது லீக் போட்டியில், வங்கதேசம்-ஆஃப்கானிஸ்தான் அணிகள் சவுதம்டன் நகரில் மோதுகின்றன.

மோர்தாசா தலைமியிலான வங்கதேச அணி இதுவரை 6 போட்டிகள் விளையாடி உள்ளன. அதில் 2 போட்டிகள் மற்றுமே வங்கதேசம் வென்றுள்ள நிலையில், புள்ளிவிவர பட்டியில் 6 ஆவது இடத்தில் உள்ளது.

வங்கதேச அணி, இனி எஞ்சியிருக்கிற 3 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுகளில் நுழையமுடையும்.

ஆஃப்கானிஸ்தான் அணி கடந்த 6 போட்டிகளில், ஒரு போட்டியில் கூட வென்றதில்லை என்ற நிலையில், புள்ளிவிவர பட்டியலில் கடைசி இடமான 10 ஆவது இடத்தில் உள்ளது.

ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மோதுவது வங்கதேச அணிக்கு பெரிய சவாலாக இருக்காது என்று நினைத்தாலும், இந்தியாவுக்கு எதிரான முந்தைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி, இந்திய அணியை தனது ’அதிவிவேக’ பந்து வீச்சால் கொஞ்சம் திண்டாடவைத்தது.

இந்த விஷயம் வங்கதேச அணியின் கண் முன்னால் வந்துபோனால், பெரிய அச்சமில்லை என்றாலும் ஓரளவு அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கும்.

எனினும் இன்றைய போட்டி வங்கதேசத்திற்கு, அரையிறுதி சுற்று நுழைவுக்கான ஒரு முக்கியமான போட்டி என்பதால், வங்கதேசம் கொஞ்சம் கவனமாகவே தன்னுடைய காய்களை நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments