உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய 26வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது
அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர், வங்கதேச பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்தார். 147 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் அவர் 166 ரன்கள் குவித்தார். இதனையடுத்து காவாஜா 89 ரன்களும், பின்ச் 53 ரன்களும் மேக்ஸ்வெல் 32 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 381 ரன்கள் குவித்துள்ளது
வங்கதேச தரப்பில் சர்கார் 3 விக்கெட்டுக்களையும், ரஹ்மான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். மேக்ஸ்வெல் விக்கெட் ரன் அவுட் முறையில் அவுட் செய்யப்பட்டது. இந்த நிலையில் 49 ஓவர்களில் 382 என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் வங்கதேச அணி பேட்டிங் செய்யவுள்ளது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது