Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு 300 பிளஸ் டார்கெட்: உலகக்கோப்பையில் ரன்மழை

Webdunia
ஞாயிறு, 23 ஜூன் 2019 (19:05 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பல போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 300க்கும் அதிகமான ரன்களை குவித்து வரும் நிலையில் இன்றைய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி 308 ரன்கள் குவித்துள்ளது
 
இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30வது லீக் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகிய இமாம் உல் ஹக் மற்றும் ஃபாக்கர் ஜமாம் ஆகிய இருவரும் தலா 44 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதனையடுத்து பாபர் அசாம் 69 ரன்களும், ஹரிஸ் சோஹைல் அதிரடியாக 89 ரன்களும் எடுத்ததால் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 308 ரன்கள் குவித்துள்ளது. 
 
தென்னாப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுக்களையும் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இன்னும் சில நிமிடங்களில் 309 என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்யவுள்ளது. 
 
பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை மட்டுமே பெற்று 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் வெல்லும் அணி ஐந்து புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் மிடாஸ் மன்னனா பேட் கம்மின்ஸ்?.. அடுத்தடுத்து வென்ற கோப்பைகள்!

இப்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை…. ஆட்டநாயகன் விருது பெற்ற ஷபாஸ் அகமது!

உலகக் கோப்பையில் இந்திய அணியில் யாரை எடுக்கலாம்?... ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்த யுவ்ராஜ்!

“உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது”- ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

நான் தடுமாறிய போது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் – கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments