Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மாவுக்கு சிறந்த அணியைக் கொடுக்க வேண்டும்… யுவ்ராஜ் சிங் ஆலோசனை!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (11:47 IST)
வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை உலகக் கோப்பையில் 10 அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசியல் சூழல் காரணமாக இந்த தொடரில் பாகிஸ்தான் கலந்து கொள்வது சம்மந்தமாக இழுபறியான சூழல் நிலவியது.

இந்த முறை உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ரோஹித் ஷர்மா தலைமையில் களமிறங்குகிறது. கடந்த 11 ஆண்டுகளாக இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. இதனால் இந்தமுறை இந்தியாவில் நடக்க உள்ள இந்த உலகக் கோப்பையை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் யுவ்ராஜ் சிங் “ரோஹித் ஷர்மா சிறந்த வீரர், அவருக்கு சிறந்த அணியைக் கொடுக்கவேண்டும். தோனியும் சிறந்த வீரர்தான். ஆனால் அவருக்கு சிறந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொண்ட அணி இருந்தது.  அதனால்தான் இந்திய அணி உலகக் கோப்பை தொடரை வென்றது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. டாஸ் வென்ற இந்தியா.. முதல் 2 ஓவரில் 2 விக்கெட் இழந்த வங்கதேசம்..!

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments