Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் முதல் முறை: மதுரையில் புரோட்டா பயிற்சி மையம்..!

Advertiesment
இந்தியாவில் முதல் முறை: மதுரையில் புரோட்டா பயிற்சி மையம்..!
, புதன், 9 ஆகஸ்ட் 2023 (09:54 IST)
இந்தியாவிலேயே முதல்முறையாக புரோட்டா செய்வது எப்படி என்ற பயிற்சி மையம் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 2000 புரோட்டா மாஸ்டர்கள் உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
தமிழகத்தின் முக்கிய உணவுகளில் ஒன்று புரோட்டா என்பதும் புரோட்டாவை சாப்பிட விரும்பாத மக்களே இருக்க மாட்டார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக மதுரையில் புரோட்டா ஸ்பெஷலான உணவு என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
புரோட்டா உடம்புக்கு கெடுதல் என்று கூறப்பட்டாலும் பரோட்டா பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் புரோட்டாவில் பல வகைகள் உள்ளன. பன் புரோட்டாம் மலபார் புரோட்டாம் கொத்து புரோட்டாம் முட்டை பரோட்டாம் சிலோன் புரோட்டா என பல்வேறு வகைகள் இருக்கும் 
 
இந்த புரோட்டாக்களை தயார் செய்வதற்காக மதுரையில் தற்போது பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக செல்பி பரோட்டா டிரைனிங் சென்டர் என்ற பெயரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பயிற்சி மையம் இயங்கி வருகிறது.  இதுவரை கடந்த ஐந்து ஆண்டுகளில் 2000 புரோட்டா மாஸ்டர்கள் உருவாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலையை விமர்சித்தால் அதிமுக ஃபைல்ஸ் வரும்: பாஜக எச்சரிக்கை