அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

vinoth
புதன், 23 ஏப்ரல் 2025 (10:33 IST)
இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. அதனால் அவர் ஓய்வை அறிவித்தார்.

இதையடுத்து அவரின் தந்தை யோக்ராஜ் சிங் ‘என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கை பாதியிலேயே முடிந்ததற்குக் காரணமே தோனி மற்றும் கோலிதான்” என்றெல்லாம் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் யுவ்ராஜ் சிங் அதை மறுத்துள்ளார். தற்போது இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார் யுவ்ராஜ்.

அவரிடம் பயிற்சி பெற்ற வீரர்களில் இந்திய அணியில் இடம்பிடித்துக் கலக்கி வரும் இருவர் அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும். அவர்கள் பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ள யுவ்ராஜ் ‘நான் ஆடும் போது என் அம்மா பதற்றமாகிவிடுவார். அது ஏன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது அபிஷேக் ஷர்மாவும் ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments