Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பைக்கான 4 லட்சம் டிக்கெட் விற்பனை… இன்றிரவு தொடக்கம்!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (07:35 IST)
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த முறை இந்தியாவில் உள்ள மைதானங்களில் மட்டுமே நடக்க உள்ளதால் இந்திய அணிக்குக் கூடுதல் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த முறை இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து, பங்களாதேஷ், நியுசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் கலந்துகொள்கின்றன.

அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடருக்கான முதல்கட்ட டிக்கெட் விற்பனை சமீபத்தில் தொடங்கியது. ஆன்லைன் மூலமாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே மொத்த டிக்கெட்டும் விற்றுத் தீர்ந்தது.

இதனால் பெரும்பாலான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காத சோகத்தில் இருந்தனர்.  இப்போது இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை மூலமாக 4 லட்சம் டிக்கெட்களுக்கான விற்பனை இன்றிரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.  tickets.cricketworldcup.com  என்ற தளத்தின் மூலமாக டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகமே எதிர்பார்த்த குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்!

கடவுளுக்கும் கேப்டனுக்கும் நன்றி… தொடர் நாயகன் திலக் வர்மா பூரிப்பு!

டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது…!

சாதனைப் படைத்த சஞ்சு- திலக் கூட்டணி…!

அடுத்த கட்டுரையில்
Show comments