Publish Date: Fri, 27 Oct 2023 (14:20 IST)
Updated Date: Fri, 27 Oct 2023 (14:23 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறி வருகிறது.
ஆனால் இப்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை தொடரை முடித்ததும் இந்திய அணி உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு சென்று டி 20 தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கு பயிற்சியாளராக வி வி எஸ் லஷ்மன் செயல்படுவார் என சொல்லப்படுகிறது.
உலகக் கோப்பை தொடரோடு டிராவிட்டின் பதவிக்காலம் முடிகிறது. அதன் பின்னர் அவரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா அல்லது முடித்துக் கொள்ளப்படுமா என்ற கேள்வி இப்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.