Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘தோனியைத் தக்கவைப்பது இன்னும் உறுதியாகவில்லை’ –சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் அளித்த பதில்!

vinoth
வியாழன், 3 அக்டோபர் 2024 (09:17 IST)
அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்குமா என்பதைதான். அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. அவரை மிகப்பெரிய தொகை கொடுத்து தக்கவைத்தாலும், அடுத்த மூன்று சீசன்களையும் விளையாடுவார் என்று சொல்ல முடியாது.

இந்நிலையில்தான் டிசம்பர் மாதத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக பிசிசிஐ சில புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக அறிவித்துள்ளது பிசிசிஐ. இதன்மூலம் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆகிறார். இதனால் அவரைக் குறைந்த தொகையான 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த விதியால் தோனி கிட்டத்தட்ட அடுத்த சீசனில் ஆடுவது உறுதி என ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தோனியைத் தக்கவைப்பது பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசும் போது “தோனியை அன்கேப்ட் வீரராக தக்க வைப்போமா என்பதை இப்போது சொல்ல முடியாது. இன்னும் சில நாட்களில் தோனியை சந்திக்கவுள்ளேன். அவரிடம் பேசிவிட்டு அதன்பிறகு முடிவெடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

சாஹலுக்கு ஏன் ஒரு ஓவர் மட்டும் கொடுத்தேன்?- கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

கான்வேவை வெளியேற்றிய சிஎஸ்கே அணி… இதெல்லாம் ‘wrong bro’ எனக் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments