Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வெற்றி: மே.இ.தீ. முதலில் பேட்டிங் –கணக்கைத் தொடங்கிய அஸ்வின்

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (10:32 IST)
இந்தியா மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மூன்றே நாட்களில் வெஸ்ட் இண்டீஸை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் சற்று முன் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து செய்து விளையாடி வருகிறது.

சற்று முன்பு வரை அந்த அணி 14 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அந்த அணியின் கைரன் பவல் 22 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வினின் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பிராத்வெயிட் 12 ரன்களோடும் ஷாய் ஹோப் 5 ரன்களோயும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. டாஸ் வென்ற இந்தியா.. முதல் 2 ஓவரில் 2 விக்கெட் இழந்த வங்கதேசம்..!

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments