Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IPL -2024 டிக்கெட் விற்பனை - CSK நிர்வாகம் அறிவிப்பு

Sinoj
சனி, 16 மார்ச் 2024 (22:40 IST)
ஐபிஎல் 2024 சீசனுக்கு ஆன்லைனில் மட்டுமே ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்யப்படும் கூறப்பட்ட நிலையில்,  மார்ச் 18 ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டிற்காக ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை கிங்ஸ் - பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்காக சென்னை கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான், லக்னோ ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.
 
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டிற்காக ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆன்லைனில் மட்டுமே ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தகவல் வெளியாகிறது.
 
அதாவது சேப்பாக்கம்  மைதானத்தில் சி.எஸ்.கே அணி விளையாட உள்ள போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் எனவும் இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், ஐபிஎல் 2024 - சிஎஸ்கே vs ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான முதல் போட்டிக்க்கு மார்ச் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மார்ச் 18 ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
 
எனவே Paytm வாயிலாக www.insider.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என சிஎஸ்கே நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments