Publish Date: Wed, 02 Aug 2023 (07:51 IST)
Updated Date: Wed, 02 Aug 2023 (07:59 IST)
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை விளையாடி முடித்துள்ளது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது. அடுத்து டி 20 தொடர் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஆகஸ்ட் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் நடக்கின்றன. இந்நிலையில் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ரோவ்மன் பவல் கேப்டனாகவும், கைல் மேயர்ஸ் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி
ரோவ்மன் பவல் (கேப்டன்), கைல் மேயர்ஸ் (துணை கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ராஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹுசைன், அல்சாரி ஜோசப், பிரண்டன் கிங், ஒபேட் மெக்காய், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஓடியன் ஸ்மித், ஒஷேன் தாமஸ்.