Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் தோல்வி… கேப்டன் பதவியைத் துறந்த நிக்கோலஸ் பூரன்!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (08:40 IST)
வெஸ்ட் கிரிக்கெட் அணியின் லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கான கேப்டனாக நிக்கோலஸ் பூரன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.


உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தகுதி போட்டிகள் சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் தகுதி பெற தகுதி தவறிவிட்டது அந்நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருந்தாலும், இதுபோல தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். மேலும் அந்நாட்டு வீரர்களுக்கும் அந்த அணி நிர்வாகத்துக்கும் இடையே சம்பள பிரச்சனையும் நிலவி வருகிறது. இதனால் பல வீரர்கள் லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நிக்கோலஸ் பூரன் விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து ரோவ்மேன் பாவெல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments