Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனியோட விளையாட ஆசை.. ஆனா அது நடக்கவே இல்ல! - மனம் திறந்த டேல் ஸ்டெயின்!

Advertiesment
Dale steyn

Prasanth Karthick

, திங்கள், 4 நவம்பர் 2024 (11:08 IST)

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியோடு விளையாட வேண்டும் என தான் விரும்பியும், அது நடக்கவில்லை என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் கூறியுள்ளார்.

 

 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்ப நாயகராக இருப்பவரில் முக்கியமானவர் எம்.எஸ்.தோனி. தற்போது அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்ட தோனி, ஐபிஎல் போட்டிகளில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகின்றார்.

 

ரசிகர்களால் ‘தல’ என செல்லமாக அழைக்கப்படும் தோனிக்கு கிரிக்கெட் வீரர்கள் பலருமே ரசிகர்களாக உள்ளனர். அப்படியான ரசிகர்களில் தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெயினும் ஒருவர். சமீபத்தில் எம்.எஸ்.தோனி குறித்து பேசிய அவர் “தோனியை எனக்கு ரொம்ப பிடிக்கும். சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதா என அப்போதெல்லாம் மிகவும் எதிர்பார்த்தேன். சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என அதை ஏற்க தயாராக இருந்தேன்.

 

ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அணிக்கு வெளியே இருந்தபடி தோனி எப்படி செயல்படுகிறார் என பார்க்க விரும்பினேன்” எனக் கூறியுள்ளார். டேல் ஸ்டெயின் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் உள்ளிட்ட அணிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

WTC இறுதிப் போட்டிக்கு செல்ல இந்தியாவிற்கு வாய்ப்புள்ளதா? என்ன செய்ய வேண்டும்?