Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலியில் துடித்த இங்கிலாந்து வீரர்… உதவி செய்த விராட் கோலி!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (18:33 IST)
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டிற்கு பேட்டிங்கின்போது தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அப்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவருக்கு உதவினார்.

டாம் சிப்லியின் அவுட் ஆனதை அடுத்து முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 எடுத்துள்ளது.

ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட் 128 ரன்களுடன்  இருக்கிறார். நாளையும் அவரது அதிரடி தொடரும் எனத் தெரிகிறது. இந்திய அணி தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகள், அஷ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

.இந்நிலையில், மைதானத்தில் பேட்டிங் செய்துகொண்டிருந்த ஜோ ரூட், தசைப்பாடல்  அவதிப்பட்டார். அப்போது ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த விரால் கோலி ஓடிச் சென்று ஜோ ரூட்டிற்கு காலில் மசாஜ் செய்து அவருக்கு உதவினார்.

இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது  வைரலாகி வருகிறது. விராட் கோலியின் மனிதநேயத்திற்கு  அனைத்துத் தரப்பினரும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments