இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஆரம்பமாக உள்ளது
இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளிலும் இடம் பெறும் வீரர்கள் யார் யாராக இருக்கும் என்ற கணிப்பு ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குகிறார் என்றும் பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் சென்னை மைதானம் பேட்டிங்கிற்கு இருக்கும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்