Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”தல” தோனியோட நம்பிக்கைக்குரிய தளபதி நான்! – விராட் கோலி நெகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (11:57 IST)
பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரரான விராட் கோலி, முன்னாள் கேப்டன் தோனி உடனான தனது அனுபவங்கள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் கங்குலி, டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களின் காலம் முடிந்தபோது கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்தது. அப்போது புதிய தலைமுறையாக நுழைந்து இறங்கி கலக்கியவர்கள் தோனி, தினேஷ் கார்த்தி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர்..

முக்கியமாக எம்.எஸ்.தோனியின் பங்களிப்பு இந்திய அணியை மேன்மேலும் பல சாதனைகள் படைக்க செய்தது. பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கிய தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். தோனியின் விலகலுக்கு பிறகு கேப்டன்ஷிப்பிற்கு ரசிகர்களால் அதிகமாக உதிர்க்கப்பட்ட பெயர் விராட் கோலி.

தோனிக்கு பிறகு விராட் கோலி அணியை சிறப்பாக வழிநடத்தி சென்றார். தற்போது கோலியின் லெகசியும் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் புதியவர்கள் கேப்டன்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பதிவிட்டுள்ள விராட் கோலி “தோனியின் நம்பிக்கையை பெற்ற தளபதியாக இருந்ததே என் கிரிக்கெட் அனுபவத்தில் நான் மிகவும் உற்சாகமாக இருந்த காலகட்டம். எங்கள் பார்ட்னர்ஷிப் என்றும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments