Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜாவிடம் மன்னிப்புக் கேட்ட கோலி… எதற்காக தெரியுமா?

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (07:32 IST)
விறுவிறுப்பாக நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது 4 வது போட்டியில் வங்கதேச அணியை  நேற்று எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், டாஸ் 66 ரன்னும், ஹசன் 51 ரன்னும், மஹ்முதுல்லா 46 ரன்னும் அடித்தனர். எனவே 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழ்ப்பிற்கு 256 ரன்கள் அடித்தது.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தரப்பில், ரோஹித் சர்மா 48 ரன்னும், கில் 53 ரன்னும், கோலி 103ரன்னும், கே.எல்.ராகுல் 43 ரன்னும்  அடித்தனர். எனவே இந்திய அணி 41.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றறது.

இந்த போட்டியில் கடைசி கட்டத்தில் சதம் அடிப்பதற்காக கோலி, பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசினார். சிங்கிள் எடுக்கவில்லை. இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் பேசிய கோலி “ஆட்டநாயகன் விருதை ஜடேஜாவிடம் இருந்து பறித்துக் கொண்டதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் உலகக் கோப்பையில் சில அரைசதங்கள் அடித்துள்ளேன். ஆனால் அவற்றை சதங்களாக மாற்றவில்லை. அணிக்காக பெரியளவில் பங்களிப்பை செலுத்த வேண்டும் என நினைத்தேன். அது இன்று கைகூடியது மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்தது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IPL Mega Auction: சுக்கிரன் உச்சத்தில்..! அதிக விலைக்கு ஏலம் போன ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்! இதுவரையிலான ஏல பட்டியல்!

The Greatest of all time.. சச்சின் சாதனையை முறியடித்த கோலி! ஒரு வருடம் கழித்து அடித்த பவர்ஃபுல் சதம்!

ஜெய்ஸ்வால், விராத் கோஹ்லி சதம்.. இமாலய இலக்கு.. திணறும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்..!

IPL Mega Auction: ஐபிஎல் ஏலத்தில் அதிக துட்டு உள்ள அணி இதுதான்.. RTM கை கொடுக்குமா?

இரட்டை சதத்தை நோக்கி ஜெய்ஸ்வால்.. 2வது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் அசத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments