Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை 2023: புள்ளிப்பட்டியலில் 2 வது இடத்தில் இந்திய அணி

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (22:15 IST)
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா, இலங்கை, நேபாளம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

விறுவிறுப்பாக நடந்து வரும் இத்தொடரில் இந்திய அணி தனது 4 வது போட்டியில் வங்கதேச அணியை  இன்று எதிர்கொண்டது.

இப்போட்டியில்  வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 41.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த நிலையில், 2023 உலகக் கோப்பை தொடர் புள்ளிப் பட்டியலில் 2 வது இடத்திலேயே இந்திய அணி நீடிக்கிறது.

அதே புள்ளிகளுடன் உள்ள நியூஸிலாந்து அணி   நெட் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. நடப்பு தொடரில் இந்த இரு அணிகள் மட்டும்தான் இதுவரை எந்தப் போட்டியிலும் தோற்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments