Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி, ரோஹித்திடம் டி 20 எதிர்காலம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப் போகும் பிசிசிஐ!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (07:30 IST)
இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் தற்போது டி 20 போட்டிகளுக்கான அணியில் தேர்வு செய்யப்படுவதில்லை. நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.

ஆனால் 34 வயதாகும் விராட் கோலி, இன்னமும் தன்னுடைய பிரைம் பார்மில் இருந்து வருவதால் அவரால் இன்னும் சில ஆண்டுகள் டி 20 போட்டிகளில் விளையாட முடியுமென ரசிகர்கள் கருத்து கூறிவருகின்றனர். அதை நிரூபிக்கும் விதமாக அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 2 சதங்களை விளாசினார்.

இந்நிலையில் பிசிசிஐக்கு புதிய தேர்வுக்குழு தலைவராக அஜித் அகார்கர் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளார். அவர் 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரிடம் அவர்களின் எதிர்காலம் பற்றி ஆலோசிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அதில் அவர்களின் டி 20 எதிர்காலம் பற்றி விவாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments