Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் நடந்த இரு சர்ச்சையான சம்பவங்கள்!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (15:40 IST)
இந்திய அணி நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக பரபரப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தான் ஒரு மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார்.  31 ரன்களுக்கு 4 ரன்களை இழந்து தடுமாறிய இந்திய அணியை கட்டிக்காத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினார் கோலி.

அவர் 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்த இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளு 4 சிக்ஸர்களும் அடக்கம். அவரின் வாழ்நாள் சிறந்த இன்னிங்ஸை விளையாடியுள்ள கோலியை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள்  வீரர்கள் என அனைவரும் அவரைப் பாராட்டி தீபாவளிக்கு முந்தைய நாளே இந்தியாவில் தீபாவளி தொடங்கி பலரும் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் 20 ஆவது ஓவரில் இந்திய அணி விளையாடிய போது நான்காவது பந்தில் கோலி சிக்ஸ் அடித்தார். அந்த பந்து இடுப்புக்கு மேலே வீசப்பட்ட்டதால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது சம்மந்தமாக பாகிஸ்தான் வீரர்கள் நடுவர்களிடம் விவாசித்தது பரபரப்பானது.

அதன் பின்னர் அடுத்து வீசப்பட்ட ப்ரீஹிட் பந்தில் கோலி பவுல்ட் ஆனார். ஆனால் பந்து விக்கெட் கீப்பர் திசையில் பவுண்டரியை நோக்கி சென்றது. ப்ரீ ஹிட் என்பதால் அந்த பந்தில் அவுட் இல்லை என்பதால் கோலியும் தினேஷ் கார்த்திக்கும் 3 ரன்களை ஓடி சேர்த்தனர். ஆனால் அந்த பந்தை டெட் பாலாக அறிவிக்க வேண்டும் என கூறினர். ஆனால் அதை மறுத்த நடுவர்கள் பைஸ் என அறிவித்தனர். இந்த இரு சம்பவங்களும் போட்டிக்குப் பிறகும் சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments