முதலிடத்தை பிடிக்க போறது யாரு? – ராயல் சேலஞ்சர்ஸ் Vs டெல்லி கேப்பிட்டல்ஸ்!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (14:50 IST)
இன்று மாலை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸும், டெல்லி கேப்பிட்டல்ஸும் மோத உள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸும் தலா 4 முறை விளையாடி அதில் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் இரு அணிகளுமே தலா 6 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் தரவரிசை பட்டியலில் ஆர்சிபி மூன்றாவது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இன்று நடைபெறும் போட்டியில் வெல்லும் அணி முதலாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கும். நேற்றைய ஆட்டத்திற்கு முன்னாள் ஆர்சிபியே முதலிடம் வகித்தது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் வென்று ஆர்சிபி முதலிடத்தை அடைய வேண்டுமென ஆர்சிபியின் “ஈ சாலா கப் நமதே” ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸும் நல்ல ஃபார்மில் உள்ளதால் முதலிடத்தை அடைவது யார் என்ற போட்டி வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

அடுத்த கட்டுரையில்
Show comments