Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.எல்.ராகுலை விடுவித்த லக்னோ அணி? தூண்டில் போட காத்திருக்கும் RCB!

Prasanth Karthick
புதன், 23 அக்டோபர் 2024 (12:11 IST)

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் லக்னோ அணியிலிருந்து கே.எல்.ராகுல் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னதாக ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் நிலையில் அனைத்து அணிகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை அக்டோபர் 31 மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்து வந்த கே.எல்.ராகுலை அந்த அணி நிர்வாகம் விடுவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 3 சீசன்களாக லக்னோ அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டு வந்தார்.

 

கடந்த சீசனில் லக்னோ அணி உரிமையாளர் மைதானத்தில் வைத்தே கே.எல்.ராகுலிடம் ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்புகளை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாகவே இந்த விடுவிப்பு நடந்திருப்பதாக கிரிக்கெட் ரசிகர்களிடையே பேச்சு நிலவி வருகிறது. அதேசமயம், அப்போதிருந்தே ஆர்சிபி ரசிகர்கள் தங்கள் ஆதரவை கே.எல்.ராகுலுக்கு வழங்கி வருவதால் ஆர்சிபி அணி நிர்வாகம் மெகா ஏலத்தில் கே.எல்.ராகுலை எடுக்க பெரும் வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments