Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கேவுக்கு வந்த சிங்கக்குட்டி! – ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (14:47 IST)
ஐபிஎல் மினி ஏலம் நடந்து வரும் நிலையில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது.



2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம்  துபாய் கோகோ கோலா சதுக்கத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட்டை ₹6.8 கோடிக்கு ஏலத்தில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்தது.

ரூ. 2 கோடி அடிப்படை விலையாக கொண்ட ஷர்துல் தாகூரை அணியில் எடுக்க சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை அணிகள் கடும் போட்டியிட்டன. இறுதியில் சென்னை அணி ரூ. 4 கோடிக்கு  ஷர்துல் தாகூரை வாங்கியது.

உலகக்கோப்பை தெடாரில் அதிரடியாக ஆடி கவனம் ஈர்த்த ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே அணி ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவை சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அடிப்படை தொகையான ரூ.1.5 கோடிக்கு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து வீரர் ஹாரி புருக்கை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 கோடிரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

மேற்கிந்திய வீரர் ரோவ்மேன் பவலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் மினி ஏலத்தின் முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், இந்திய வீரர் மனிஷ் பாண்டே, கருண் நாயாரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஎன்பிஎல் கிரிக்கெட்: கடைசி ஓவரில் 3 விக்கெட்.. லைகா கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி..!

177 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.. மழை வந்ததால் ஏற்பட்ட திருப்பம்..!

கடைசி 5 ஓவர்களில் பேயாட்டம் ஆடும் ரிங்கு சிங்… சீனியர் வீரர்களை ஓரம்கட்டி படைத்த சாதனை!

முதல் பந்தாக இருந்தாலும் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்வேன்.. ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா கருத்து!

அதிரடி பதிலடி! 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments