Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 29 March 2025
webdunia

இந்த தவறை செய்தால் மட்டும் தோனி கடுப்பாகிவிடுவார்… சி எஸ் கே முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

Advertiesment
இந்த தவறை செய்தால் மட்டும் தோனி கடுப்பாகிவிடுவார்… சி எஸ் கே முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!
, புதன், 13 டிசம்பர் 2023 (07:02 IST)
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் போட்டிக்காக அனைத்து அணிகளும்  தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் குறித்த தகவலை தெரிவித்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி உள்பட 18 வீரர்கள் தக்க வைத்துக் கொள்ளப்பட்டனர்.

கடந்த சீசனோடு தோனி, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் பெயர் மீண்டும் அணியில் இருப்பது கோடிக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.

இந்நிலையில் கேப்டன் கூல் என அழைக்கப்படும் தோனி கோபப்படும் தருணம் பற்றி சிஎஸ்கே அணிக்காக விளையாடிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யு ஹெய்டன் பேசியுள்ளார். அதில் “தோனிக்கு பீல்டிங்கில் கோட்டை விட்டால் மட்டும் பிடிக்காது. அதனால் வீரர்கள் பீல்டிங்கில் கவனமாக இருக்கவேண்டும் என நினைப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

IND vs SA- 2 வது டி20 போட்டி: ஜெய்ஸ்வால் மற்றும் கில் டக் அவுட்!