திலக் வர்மாவை அழைத்துப் பாராட்டிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

vinoth
புதன், 1 அக்டோபர் 2025 (11:06 IST)
சில தினங்களுக்கு முன்னர் துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.  இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 147 ரன்கள் இலக்கை, இந்தியா கடைசி ஓவரில் இலக்கை எட்டி ஒன்பதாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.

இந்த போட்டியில் இரண்டாவதாக பேட் செய்த இந்திய அணி ஆரம்பத்தில் மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அதன் பிறகு திலக் வர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் நிலைத்து நின்று ஆடி இந்திய அணி வெற்றிபெற வைத்தனர். திலக் வர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று ஆடி 53 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற திலக் வர்மா தன்னிடம் இருந்து வெளிப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி திலக் வர்மாவை அழைத்து வெகுமதி அளித்து பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திலக் வர்மாவை அழைத்துப் பாராட்டிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியிலேயே இந்தியா அசத்தல் வெற்றி..!

இரு அணி வீரர்களும் திமிராக நடந்துகொண்டனர்… சையத் கிர்மாணி ஆவேசம்!

நான்கு வார ஓய்வு… ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை இழக்கும் ஹர்திக் பாண்ட்யா!

ஹாரிஸ் ரவுஃபுக்கு நன்றி.. ரவிச்சந்திரன் அஸ்வினின் கிண்டல் பதிவு வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments