Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்ப போட்டிகளை இழக்கும் சூர்யகுமார் யாதவ்.. மும்பை இந்தியன்ஸுக்கு பின்னடைவு!

vinoth
செவ்வாய், 12 மார்ச் 2024 (11:44 IST)
சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் பீல்டிங் செய்த போது சூர்யகுமார் யாதவ்வுக்கு கனுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவருக்கு சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில் அவர் இந்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி அவரே இப்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் “அனைவருக்கும் வணக்கம். பலரும் எனது உடல் பிட்னெஸ் குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. நான் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா பிரச்சனைக்காக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இப்போது தீவிரமாக பழைய உடல்தகுதியைப் பெற உழைத்து வருகிறேன். விரைவில் உங்களைக் களத்தில் சந்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார். ஆனால் நேரடியாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று கூறாததால் சந்தேகம் வலுத்துள்ளது. ஒருவேளை அவர் மும்பை அணிக்காக விளையாடவில்லை என்றால் அது பின்னடைவாக இருக்கும்

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி சூர்யகுமார் யாதவ் முதலிரண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. அதன் பிறகு அவர் அணியில் இணைவார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆறுதலான விஷயம்!

திலக் வர்மாவை வெளியே போக சொன்ன ஹர்திக்.. தோல்விக்கே அதுதான் காரணம்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ… தப்பித்த ரிஷப் பண்ட்!

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments