Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவ்ளோ விக்கெட்கள் வீழ்த்தினாலும் அவருக்கு பசி அடங்காது… சூர்யமார் பாராட்டிய இந்திய பவுலர்!

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (07:20 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்த நிலையில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 60 ரன்கள் சேர்க்க, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 201 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் ஆடிய தென்னாப்பிர்க்கா அணி 14 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது.  அந்த அணியின் டேவிட் மில்லர் அதிகபட்சமாக 35 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

போட்டி முடிந்த பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் “எப்போதும் சதம் அடித்தால் மிகச்சிறந்த உணர்வை பெறுகிறேன். அந்த போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த தொடரை தொடங்கும் முன்பே எந்த அச்சமும் இல்லாமல் விளையாட வேண்டும் என நினைத்தோம்.

குல்தீப் யாதவ்வுக்கு எவ்வளவு விக்கெட்கள் எடுத்தாலும் பத்தாது. மேலும் மேலும் விக்கெட்கள் வீழ்த்த வேண்டும் என்ற பசி அவருக்கு உள்ளது. இந்த 5 விக்கெட் அவரது பிறந்தநாளுக்கு அவரே கொடுத்துக்கொண்ட பரிசு. ” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு வீரர்கள் மேல் கோபத்தைக் காட்டிய கம்பீர்?

ஆஸி தொடருக்கு கம்பீர் கேட்ட மூத்த வீரரை தேர்வுக்குழு கொடுக்கவில்லையா?

சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டும் திமுக அரசு: ஜெயக்குமார் கண்டனம்

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments