தோனி செய்த தவறையே அஸ்வினும் செய்துள்ளார்… கவாஸ்கர் கருத்து!

vinoth
வியாழன், 19 டிசம்பர் 2024 (07:53 IST)
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி சமன் செய்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருந்தபோது அதிர்ச்சி செய்தியாக அஸ்வின் தன்னுடைய ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார்.  தற்போது டெஸ்ட் விளையாடி வரும் பவுலர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அஸ்வின். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 516 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார் அஸ்வின். இந்திய அணிக்காக அதிக தொடர் நாயகன் விருதை வென்றவர் என்ற பெருமைக்குரியவர் அஸ்வின். தோனி போலவே ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரின் பாதியிலேயே அஸ்வினும் ஓய்வை அறிவித்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள சுனில் கவாஸ்கர் “தோனி செய்த தவறையே அஸ்வினும் செய்துள்ளார். தோனி போலவே பாதியிலேயே ஓய்வை அறிவித்ததால் தொடரின் மீதி போட்டிகளில் ஒரு வீரர் இல்லாததது போன்ற உணர்வை உருவாக்கியுள்ளார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 பவுண்டரி.. 15 சிக்சர்ஸ்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவம்ஷி.. 300ஐ தாண்டிய ஸ்கோர்..!

மகளிர் ஐபிஎல்.. ஆர்சிபி மீண்டும் சாம்பியன்.. ஸ்மிருதி மந்தனாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு..!

மகளிர் ஐபிஎல்.. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஆர்சிபி.. கோவாவில் ஓய்வெடுக்கும் வீராங்கனைகள்..!

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கிறாதா ஐசிசி? இன்று ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments