Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வினுக்கு எதிரான பதற்றம் தெளிந்தது… அவருக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன் - ஸ்டீவ் ஸ்மித்

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (10:40 IST)
இந்திய வீரர் அஸ்வினுக்கு எதிராக சரியாக விளையாடாமல் அவுட் ஆன ஸ்டீவ் ஸ்மித் இப்போது அவரது பந்தை எதிர்கொள்ள தெளிவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.


டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பிளேயர் என்றால் அது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தான். 60 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் அவரை நவீன கால டெஸ்டின் பிராட்மேன் என வர்ணிக்கின்றனர் விமர்சகர்கள். ஆனால் இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அதுவும் அஷ்வின் பந்தில் தொடர்ந்து அவுட் ஆகி வருகிறார்.

இது குறித்து பேசியுள்ள ஸ்மித் ‘நான் சுழல்பந்தை ஆக்ரோஷமாக விளையாடுவேன். எனது ஆட்டத்தின் மூலம் அஷ்வினுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பினேன். ஆனால் அதற்கு எதிராக நடந்துள்ளது. இரு முனைகளைக் கொண்ட கத்தியை போன்ற சவால் இது. என்னால் மீண்டும் திரும்ப முடியும் என நினைக்கிறேன். அஷ்வினை தவிர எந்தவொரு பவுலரும் இப்படி என்னை நிலைதடுமாற வைத்ததில்லை’ என இரண்டாவது டெஸ்ட் முடிந்ததும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ‘இந்த முறை நீண்ட நேரம் களத்தில் நின்று அஸ்வினுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன். இதற்கு முன்னர் அவர் பதற்றமடைந்ததில்லை. இந்த போட்டியில் நான் நிதானமாகிவிட்டேன். அதனால் எனக்குள் உற்சாகம் வந்துவிட்டது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்