Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் சத வாய்ப்பை தவறவிட்ட சுப்மன் கில்!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (10:03 IST)
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 91 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஐந்தாம் நாளில் இந்திய அணி வெற்றிக்கு 321 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே ரோஹித் ஷர்மா விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் புஜாரோவோடு ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கில்.

அதிரடியாக விளையாடிய அவர் 146 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தனது முதல் டெஸ்ட் சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்ட் ஆனது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி தற்போது 175 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments