Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்னோ அணியை உருவாக்கியதே கம்பீர்தான்.. சஞ்சீவ் கோயங்கா நெகிழ்ச்சி!

vinoth
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (08:00 IST)
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் அணிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்த்தப்பட்ட போது இணைந்த அணிகளில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். அந்த அணியை தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்கா வாங்கினார். அந்த இரண்டு முறை ப்ளே ஆஃப்க்கு சென்று நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.

ஆனால் இந்த ஆண்டு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடரில் பல சர்ச்சையான விஷயங்கள் நடந்தன. அதில் லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுலிடம் போட்டி முடிந்ததும் மிகவும் அநாகரிகமாகவும், ஆவேசமாகவும் பேசியதும் ஒன்று. இந்த வீடியோ வைரலாக ரசிகர்கள் “ஒரு அணித் தலைவரை உரிமையாளர் இப்படி எல்லாம் அவமானப்படுத்தக் கூடாது” எனக் கண்டனம் தெரிவித்தனர்.

இதனால்  கே எல் ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி வேறொரு அணியில் இணையப் போகிறார் என்ற கருத்துகள் எழுந்தன. ஆனால் இப்போது ராகுல் லக்னோ அணிக்கே திரும்ப கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக மட்டும் விளையாட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் லக்னோ அணியை உருவாக்கியதில் கவுதம் கம்பீரின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து சஞ்சீவ் கோயங்கா பேசியுள்ளார். அதில் “லக்னோ அணி எங்களுக்கு வழங்கப்பட்ட போது எங்களிடம் ஒரு அனலிஸ்ட் கூட இல்லை. அப்போது அணியை வடிவமைப்பதில் இருந்து அனைத்து வகையான வீரர்களையும் அணிக்குள் இணைத்தது வரை அனைத்தையும் கம்பீர்தான் செய்தார். அணி உருவாக்கத்தில் அவரின் பங்கு அளப்பரியது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments