Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி ஆடும் போது அவர் பேட்டில் இருந்து வந்த சத்தம் அவர் யார் என்பதை சொன்னது… ஆரம்பப் போட்டிகளிலேயே கணித்த சச்சின்!

vinoth
வியாழன், 12 செப்டம்பர் 2024 (09:47 IST)
இந்திய கிரிக்கெட்டில் உருவான மிகச்சிறந்த கேப்டனாகவும் கிரிக்கெட்டராகவும் தோனி உள்ளார். சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

அவர் தலைமையில் இந்திய அணி 2007 ஆம் ஆண்டி டி 20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆகியவற்றை வென்றது. ஐசிசி நடத்தும் மூன்று விதமான தொடர்களிலும் கோப்பை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார் தோனி. தோனி வளர்ந்து வரும் வீரராக இருந்தபோது அவரை இந்திய அணிக்குக் கேப்டனாக நியமிக்கப் பரிந்துரை செய்ததது சச்சின்தான் என்பது அனைவரும் அறிந்தது.

ஆனால் சச்சின், தோனியின் ஆரம்ப கால போட்டிகளிலேயே அவருடைய அடித்தாடும் திறமையையும் கண்டுபிடித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் பேசும் போது “தோனி அறிமுகமான வங்கதேச தொடரின் ஒரு போட்டியில் அவர் ஒரு போட்டியில் இறங்கி கடைசியில் சில பந்துகளை அடித்து ஆடினார். அப்போது அவர் பேட்டில் இருந்து சத்தத்தைக் கேட்ட நான், கேப்டன் கங்குலியிடம் இந்த பையனிடம் அபாரமான திறன் இருக்கிறது எனக் கூறினேன். அது என்ன சத்தம் என்றால் பெரிய ஹிட்டர்ஸ்களின் பேட்களில் இருந்து வரும் ஸ்பெஷல் சத்தம். அவர்கள் பந்தை அடிக்கும் போது அது கண்டிப்பாக சிக்ஸ்தான் என சொல்லும் சத்தம். அந்த பந்துகளை நாம் பார்த்தால் நாம் எதிர்பார்த்ததை விட 10 அடிகளாவது பந்து அதிக தூரம் சென்று விழுந்திருக்கும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments