Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதை மட்டும் செய்தால் ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் ஷர்மா இடம்பிடிக்கலாம் – கங்குலி உறுதி!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (17:14 IST)
காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து இந்திய துணை கேப்டன் ரோஹித் ஷர்மா விலக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே என சொலல்ப்பட்டது.

இன்று அவருக்கு பிசிசிஐ மருத்துவர்கள் சோதனை நடத்துகின்றனர். அந்த சோதனையில் அவர் உடல்தகுதி பெற்றிருந்தால் ஆஸ்திரேலிய தொடரின் பின் பகுதியில் இணைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் எப்படியும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது கடினம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா தொடரில் இல்லாதது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ‘ அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருகின்றனர். மருத்துவ அறிக்கை தேர்வுக் குழுவினரிடம் கொடுக்கப்பட்டுள்ளதுஅதனால் அதில் நாங்கள் தலையிடமுடியாது.  எனக்கு தெரிந்ததெல்லாம் இப்போது அவர் விளையாடாமல் இருப்பதே நல்லது. அப்படி விளையாடினால் அந்தக் காயம் மேலும் பாதிப்பை உண்டாக்கும்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி ‘ரோஹித் ஷர்மா தனது உடல்தகுதியை நிருபித்தால் கண்டிப்பாக ஆஸ்திரேலிய தொடரில் சேர்த்துக் கொள்ளப்படுவார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளே மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments