Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச கிரிக்கெட்டில் எந்த வீரரும் படைக்காத சிந்தனை… 600 சிக்ஸர்களை விளாசி ரோஹித் ஷர்மா முதலிடம்!

vinoth
வியாழன், 6 ஜூன் 2024 (07:59 IST)
நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி மிக எளிதாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்த ரோஹித் ஷர்மா 3 சிக்ஸர்களை விளாசினார்.

இதன் மூலம் சர்வதேசக் கிரிக்கெட்டில் அவர் ஒரு புதிய மைல்கல் சாதனையை எட்டியுள்ளார். அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெய்ல் 553 சிக்ஸர்கள், ஷாகித் அப்ரிடி 476 சிக்ஸர்கள், மெக்கல்லம் 398 சிக்ஸர்கள் என அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

மேலும் இந்த போட்டியின் மூலம் அவர் 4000 டி20 ரன்களையும் கடந்துள்ளார். அதை அவர் குறைந்த பந்துகளில் எட்டியுள்ளார். 2860 பந்துகளில் அவர் அதிவேகமாக 4000 ரன்களை எட்டி சாதனை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments