Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

Webdunia
சனி, 18 மே 2024 (07:34 IST)
ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியுள்ள லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் நேற்று ஆறுதல் வெற்றிக்காக விளையாடின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 6 விக்கெட்களை இழந்து 214 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் 29 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து அதிரடியாக ஆடினார்.

இதையடுத்து பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் மட்டும் சேர்த்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மும்பை அணியில் ரோஹித் ஷர்மா 68 ரன்களும், நமன் திர் 62 ரன்களும் சேர்த்தனர். லக்னோ அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றாலும், அவர்களின் நெட் ரன்ரேட் காரணமாக அவர்களால் ப்ளே ஆஃப் செல்ல முடியாத சூழல் இல்லை.

இந்த போட்டியில் 38 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்த ரோஹித் ஷர்மா அவுட் ஆகி வெளியேறிய போது ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி அவரை வழியனுப்பினர். மும்பை அணி நிர்வாகத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் இந்த ஆண்டோடு மும்பை அணியை விட்டு நீங்க உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 நிமிடத்தில் 10 லட்சம் லைக்குகள்… சாதனைப் படைத்த ஹர்திக் பாண்ட்யாவின் புகைப்படம்!

இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்து செல்லும் கம்பீர்… காரணம் என்ன?

சாம்பியன்ஸ் கோப்பை தோல்வி… பாகிஸ்தான் அணியில் பல அதிரடி மாற்றம்!

ஐசிசி என்றால் இந்திய கிரிக்கெட் வாரியமா?... அதிருப்தியை வெளியிட்ட வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!

ஆறுமுறை ஐசிசி தொடரை நடத்தியும் ஏன் உங்களால் வெல்ல முடியவில்லை… இங்கிலாந்து வீரர்களுக்கு கவாஸ்கர் கேள்வி!

அடுத்த கட்டுரையில்
Show comments