Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் கிட்ட நிறைய எதிர்பார்த்தேன்… ஆனா ஏமாற்றம்தான் – சுனில் கவாஸ்கர் அதிருப்தி!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (09:13 IST)
நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பரிதாபகரமாக தோற்றது. அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கேப்டன்சி கோலி போல ஆக்ரோஷமாக இல்லை என்றும் அவர் வீரர்களிடம் பாசிட்டிவ் எனர்ஜியை கடத்துவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ரோஹித் ஷர்மாவை எப்போதும் ஆதரித்து பேசும் முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் இப்போது அவரின் கேப்டன்சி ஏமாற்றம் அளிப்பதாகக் கூறியுள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் "நான் அவரிடமிருந்து (ரோஹித்திடம்) அதிகம் எதிர்பார்த்தேன். வெளிநாட்டில் நீங்கள் சிறப்பாகச் செயல்படுகிறீர்களா என்பதுதான் சோதனை. அங்குதான் அவர் கொஞ்சம் ஏமாற்றம் அளித்துள்ளார்.

டெஸ்ட்டில் மட்டுமில்லை. டி20 வடிவத்தில் கூட.. அனைத்து அனுபவங்களுடனும் ஐ.பி.எல்., கேப்டனாக நூற்றுக்கணக்கான போட்டிகளில் விளையாடிய அவர் இந்திய அணியை டி 20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு அழைத்து வர முடியாமல் போனது ஏமாற்றத்தை அளித்துள்ளது” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments