Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

vinoth
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (15:34 IST)
இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறது. இதையடுத்து வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் சென்னையில் வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே சென்னை வந்த இந்திய அணி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் ஆடப்போகும் லெவன் அணி என்னவாக இருக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

இதில் கே எல் ராகுல் இடம்பெறுவாரா என சந்தேகம் நிலவி வந்த நிலையில் இப்போது அவரைப் பற்றி கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் “கே எல் ராகுல் சிறந்த வீரர். அவர் சமீபத்தைய சில தொடர்களில் கூட சிறப்பாகவே விளையாடியுள்ளார். அவர் ஏன் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்கவில்லை என எனக்குத் தெரியவில்லை. நடக்க இருக்கும் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் ஆடும் லெவனில் ஆடுவது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி.. முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் விவரம்..!

ஆஸ்திரேலிய வீரருடன் மோதல்: விராட் கோலிக்கு 20% அபராதம்..!

தோனியப் பாத்தே பத்து வருஷம் இருக்கும்… மீண்டும் சி எஸ் கேவுக்கு செல்வது குறித்து அஸ்வின்!

அறிமுக வீரர் கோன்ஸ்டாண்டை சீண்டிய கோலி… அனல் பறந்த தருணம்!

என் கிரிக்கெட் வாழ்க்கையில் நடக்காத ஆசை இதுதான்… அஸ்வின் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments